காசாவின் மிகப்பெரிய வைத்தியசாலையை முற்றிலுமாக அழித்த இஸ்ரேல்!

அல்-ஷிஃபா மருத்துவமனை முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

மருத்துவமனை அல்-ஷிஃபா மருத்துவமனை காஸா பகுதியில் செயல்பட்டு வந்த மிகப்பெரிய மருத்துவமனை ஆகும்.

குறித்த மருத்துவமனை தற்போது முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டதாகவும், அங்கு முற்றிலும் சிதைக்கப்பட்ட 5 சடலங்கள் இருந்ததாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹமாஸூக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் இராணுவம், அல்-ஷிஃபா மருத்துவமனையில், தீவிரவாதிகள் தங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அங்கு தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

அதன்பிறகு அந்த இடத்தைப் பார்வையிட்ட உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுக் குழு, மருத்துவமனை முற்றிலும் சேதமடைந்திருப்பதாக தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *