உலக நிதி வழங்கும் நிறுவனங்களுடன் ரணில் தலைமையிலான அரசாங்க முக்கிஸ்தர்கள் முக்கிய கலந்துறையாடல்:

சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி (WB), சர்வதேச நிதி நிறுவனம் (IFC), பலதரப்பு முதலீட்டு உத்தரவாத நிறுவனம் (MIGA), ஆசிய வளர்ச்சி வங்கி (ADB), ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி ( AIIB), ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JISA), சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்கா நிறுவனம் (USAID), ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் ஐக்கிய நாடுகள் சபை (UN) சர்வதேச அபிவிருத்தி பங்காளிகள் மற்றும் இலங்கை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் கொழும்பில் இன்று (31) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

டிசம்பர் 2022 இல் நடைபெற்ற முதல் கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற இக் கலந்துறையாடலில், நெருக்கடியில் இருந்து மீண்டு நிலையான வளர்ச்சியை நோக்கி நகர்வதை இலக்காகக் கொண்ட இலங்கை அரசாங்கத்தின் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கையின் அபிவிருத்திக்கான சவால்கள், வாய்ப்புகள் மற்றும் அர்ப்பணிப்புக்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *