தேசிய அளவில் அரிசி விலை உயர்ந்து வருவதை கட்டுப்படுத்த அரிசி ஏற்றுமதிக்கு கடந்த ஜூலை 20-ந் தேதி மத்திய அரசு தடை இந்தியாவிலிருந்து அரிசி ஏற்றுமதிக்கு விதித்த தடையால் உலக சந்தையில் அரிசி விலை உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றுமதிக்கு தடையால் உலகச் சந்தையில் அரிசி விலை டன் 700 டாலராக உயர்ந்துள்ளது.
அரிசி உற்பத்தி நாடான தாய்லாந்தில் டன் 670 முதல் 690 டாலர் வரை விலை உயர்ந்துள்ளது. தாய்லாந்தில் 5 சதவீத உடைந்த குருணை அரிசி ஏற்றுமதி விலை கடந்த ஜூலை மாதம் டன் 534 டாலராக இருந்த நிலையில் தற்போது டன் 646 டாலராக உயர்ந்துள்ளது. இதேபோன்று வியட்நாமில் கடந்த ஜூலை மாதம் ஏற்றுமதிக்கானஅரிசி விலை டன் 489 டாலராக இருந்த நிலையில் தற்போது டன் 504 டாலராக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் மலேசிய அரசு இந்திய அரசிடம் இருந்து நேரடியாக அரிசி இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பாகிஸ்தானில் ஏற்றுமதி அரிசி விலை டன் 608 டாலர் முதல் 612 டாலராக உயர்ந்துள்ளது. ஆனால் இந்திய புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு டன் 500 டாலராக உள்ளது. மொத்தத்தில் மத்திய அரசு உள்ளூர் சந்தையில் அரிசி விலையை குறைக்க நடவடிக்கை எடுத்த நிலையில் அதன் காரணமாக உலக சந்தையில் அரிசி விலை உயர்ந்துள்ளது. மேற்கண்ட தகவலை வணிகர்கள் தெரிவித்தனர்.