இலங்கை மின்சார சபைக்குசு் சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் மூன்றாவது நாளாகவும் வெள்ளிக்கிழமை (05) கொழும்பு கோட்டையில் உள்ள இலங்கை மின்சார சபை தலைமையகத்துக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
நாடு முழுவதிலும் உள்ள இலங்கை மின்சார சபை ஊழியர்களில் பெரும்பாலானோர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதேவேளை, ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சின் வளாகம், மத்திய வங்கி மற்றும் காலி முகத்திடல் ஊடாக பிரவேசிப்பதற்கும் சிற்றம்பலம் ஏ.கார்டினர் மாவத்தையில் இடையூறுகள விளைவிப்பதற்கும் இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கத் தலைவர் ரஞ்சன் ஜயலால் உள்ளிட்டோருக்கு தடை விதித்து கோட்டை நீதிவான் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (5) உத்தரவு பிறப்பித்துள்ளது.