இலங்கையில் வீழ்ச்சியடைந்து வரும் பிறப்பு வீதம்!

நாட்டில் பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இறப்பு வீதம் அதிகரித்து வருவதாக  பதிவாளர் நாயகத்  திணைக்களத்தின், சிரேஷ்ட பிரதி பதிவாளர் நாயகம் சட்டத்தரணி லக்சிக்கா கணேபொல தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதி பதிவாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளதாவது” கடந்த 2000ஆம் ஆண்டில், நாட்டில் சராசரி இறப்பு எண்ணிக்கை 140,000ஆகக் காணப்பட்டது. அந்த எண்ணிக்கை தற்போது 180,000ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் பிறப்பு எண்ணிக்கையும்  வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு, நாட்டில்பிறப்பு எண்ணிக்கை சுமார் 325,000ஆக காணப்பட்டது.

மேலும் பொருளாதார நெருக்கடி காரணமாக உரிய நேரத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியாமல், பல்வேறு நோய் நிலைமைகளுக்கு ஆளாகுதல், மற்றும் மனநல பிரச்சினைகள் உள்ளிட்ட காரணங்களால்  உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக பிரதி பதிவாளர் நாயகம்  தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *