2024 ஜனாதிபதி தேர்தலில் முதலாம் கட்ட வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. இந்த முடிவுகளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 5,634,915 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.
சஜித் பிரேமதாச 4,363,035 வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், ரணில் விக்கிரமசிங்க 2,299,767 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
வாக்குகள் அடிப்படையில் வெற்றிப் பெற்ற அநுர குமார திஸாநாயக்க 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாத காரணத்தினால் தற்போது இரண்டாம் கட்ட விருப்பு வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.