இலங்கையில் – நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளமை தொடர்பில் அமெரிக்கா தனது கவலை:

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசினால் சபைக்கு சமர்ப்பித்திருந்த நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளமை தொடர்பில் அமெரிக்கா தனது கவலையை வெளியிட்டுள்ளது.

இது குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

“ சிவில் சமூகம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களின் கோரிக்கைகளை உள்ளடக்காமல் பாராளுமன்றில் நேற்று நிறைவேற்றப்பட்ட இலங்கையின் நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தின் சாத்தியமான தாக்கம் குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளது.

 ஜனநாயக விழுமியங்களை ஆபத்தில் தள்ளுவதுடன் தெளிவற்ற மற்றும் மிகையான கடுமையான சட்டங்கள் முதலீடு மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு இடையூறாக அமையும் என்பதுடன் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும்.

வெளிப்படைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்குமாறும், எந்தவொரு சட்டமும் மக்களின் குரல்களை நசுக்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் இலங்கையை அமெரிக்கா வலியுறுத்துகிறது. என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *