இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்த மாணவி உயர்தரப் பரீட்சையில் மாவட்ட ரீதியில் முதலிடம்!

இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்து தாய் மற்றும் அப்பம்மா ஆகியோரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த டொறின் ரூபகாந்தன் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் வர்த்தக பிரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள்​ நேற்று (04) மாலை வெளியான நிலையில், அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு மகாவித்தியாலய மாணவி வர்த்தக பிரிவில் 3 ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தினை பெற்றுள்ளார்.

இந்த மாணவி வர்த்தக பிரிவில் பொருளியல் , வணிகம் , கணக்கியல் ஆகிய பாடங்களில் 3 ஏ சித்தியினையும் ஆங்கிலம் பாடத்தில் எஸ் பெறுபேற்றையும் பெற்று மாவட்ட ரீதியில் முதலாவது இடத்தினையும் தேசிய மட்டத்தில் 728 வது இடத்தினையும் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *