தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் வவுனியா ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை 10.30மணிக்கு ஆரம்பமாகியது.
தமிழரசுகட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் இடம்பெற்றுவரும் குறித்த கூட்டத்தில் அக் கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எ.சுமந்திரன்,; சி.சிறிதரன், மற்றும் சாணக்கியன் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஆத்துடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிஸ்கந்தராயா, மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.