அமெரிக்காவில், பென்சில்வேனியா மாகாணம் பட்லர் நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென கூட்டத்தில் இருந்த நபர் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தினார்.
இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் டொனால்டு டிரம்ப் காதில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது.
20 வயதுடைய தோமஸ் மத்தியு குரூக்ஸ் என்பவரே இந்த தாக்குதலை மேற்கொண்டார் என தெரிவித்துள்ள எவ்பிஐ துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் இன்னொருவரும் இந்தச் சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.