அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியிருக்கிறார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அண்ணாமலை விமர்சித்த போது அவருக்கு எதிராக தீர்மானம் மட்டுமே நிறைவேற்றிய அதிமுக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கருத்து காரணமாக அதிமுக பாஜக இடையே கடந்த காலங்களில் பல்வேறு மோதல்கள் ஏற்பட்ட நிலையில், தற்போது அதில் உச்சக்கட்டமாக இம்முறை பாஜக தங்கள் கூட்டணியிலேயே இல்லை என்று கூறியுள்ளது.