தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடாத்துகின்ற ‘கார்த்திகை வாசம்’ மலர்க்கண்காட்சி நல்லூர் கிட்டு பூங்காவில் (சங்கிலியன் பூங்கா) இன்று வெள்ளிக்கிழமை (14) பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இத்தொடக்க விழாவில் கௌரவ விருந்தினராகக் கலந்து கொள்ளும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் நேற்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு வருகை தந்த அவர் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார்
தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணியின் துணைச் செயலாளர் தம்பிராசா யுகேஸ் தலைமையில் நடைபெறவுள்ள இத் தொடக்க நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் சி.சிவலிங்கராஜா கலந்து கொள்கிறார். தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தொடக்க உரையாற்ற, அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் சிறப்புரை ஆற்றவுள்ளார்.
