இந்தியாவின் நாகப்பட்டினத்துக்கும் – இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை இன்று (26) இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததாலும், வானிலை மாற்றத்தின் காரணமாகவும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நாகை – இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று கப்பல் நிறுவனம் அறிவித்து உள்ளது.