சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோஸி:

பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான நிகோலஸ் சர்கோஸி (வயது 70), தேர்தல் நிதிச் சதி வழக்கில் விதிக்கப்பட்ட 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையைத் தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை (ஒக்டோபர் 21, 2025) சிறையில் அடைக்கப்பட்டார்.

2007 முதல் 2012 வரை பிரான்ஸ் ஜனாதிபதியாகப் பதவி வகித்த நிகோலஸ் சர்கோஸி, 2007ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது, லிபியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதியான முவாம்மர் கடாபியிடம் இருந்து சட்டவிரோதமாகப் பிரச்சார நிதி பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கு பாரிஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் (செப்டம்பர் 25, 2025) தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், நிகோலஸ் சர்கோஸி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 1,00,000 யூரோ அபராதமும் விதிக்கப்பட்டது.

நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, இன்று பாரிஸில் உள்ள லா சாண்டி சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக, அவர் தனிச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

தனக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து நிகோலஸ் சர்கோஸி மேன்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் இத்தகைய குற்றச்சாட்டில் சிறைக்குச் செல்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *