1990 ஆம் ஆண்டு முதல் மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தில முகாமிட்டிருந்த இராணுவ முகாமானது 35 வருடங்களின் பின்னர் செவ்வாய்க்கிழமை (30) அகற்றப்பட்டு மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான உத்தியோக பூர்வ நிகழ்வு செவ்வாய்க்கிழமை (30) முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலய இராணுவ முகாமில் நடைபெற்றது. இராணுவத்தினரினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில்ஹந்துனித்தி கலந்து கொண்டார்.
இதன்போது இராமகிருஷ்ணமிஷன் வித்தியாலய வளாகமானது அமைச்சர் சுனில்ஹந்துனித்தியினால் அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் முன்னிலையில் கிரான் பிரதேச செயலாளர் கே.சித்திரவேலிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.