கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் சுட்டெண் (ASPI) இன்று மீண்டும் வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது.
அதன்படி, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது 102.30 புள்ளிகள் அதிகரித்து 21,778.60 புள்ளிகளாக முடிவடைந்தது.
இதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் கொழும்பு பங்குச் சந்தை 33.2% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை (CSE) தெரிவித்துள்ளது.
இன்று S&P SL20 சுட்டெண் 7.32 புள்ளிகள் உயர்ந்து 6,126.53 புள்ளிகளாகப் பதிவானது.
வர்த்தக நாளின் மொத்த புரள்வு 6.27 பில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ளது.