சீனாவின் விவசாய மற்றும் கிராமப்புற விவகார முன்னாள் அமைச்சர் டாங் ரென்ஜியனுக்கு, ஜிலின் மாகாணத்தில் உள்ள நீதிமன்றமொன்று இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் கீழ் நேற்று முன்தினம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இவ்வாறு தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பதை சீனாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா உறுதிப்படுத்தியுள்ளது.
2007 முதல் 2024 வரையான காலப்பகுதியில் பல்வேறு பதவிகளை வகித்த இவர், 268 மில்லியன் யுவான் (37.6 மில்லியன் டொலர்) மதிப்புள்ள பணம் மற்றும் சொத்து உள்ளிட்ட பலவற்றை இலஞ்சமாகப் பெற்றுள்ளதாகவும் சின்ஹுவா குறிப்பிட்டுள்ளது.
இவர் மீதான குற்றச்சாட்டை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது. அதே நேரத்தில் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியதால், இரண்டு ஆண்டுகளுக்கு இந்த உத்தரவை செயல்படுத்துவதை ஒத்தி வைப்பதாக கூறியுள்ளது. மேலும், சட்டவிரோதமாகப் பெற்ற சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.