முல்லைத்தீவு கடற்பகுதியில் ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு பணிப்பு:

முல்லைத்தீவு கடற்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின்  பணிப்பின் பேரில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி கோலித கமல் ஜினதாச மற்றும் முல்லைத்தீவு உதவிப் பணிப்பாளர் சுதாகரன் ஆகியோர் மீனவ பிரதிநிதிகளைச் சந்தித்தனர்.

இதன்போது மீனவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்ததுடன், அவர்களின் கோரிக்கைகளும் உள்வாங்கப்பட்டதோடு, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *