இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவர், நாளை (31) நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
அவர்களை அழைத்து வருவதற்காக விசேட பொலிஸ் குழு இன்று (30) நாட்டிலிருந்து சென்றுள்ளதக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டிலிருந்து சென்ற இரண்டு உதவி பொலிஸ் அத்தியட்சகர்களான ரோஹன் ஓலுகல மற்றும் மஹிந்த ஜயசுந்தர ஆகியோர் இந்தோனேசிய பொலிஸாருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையில் இந்தோனேசிய தலைவர் ஜகார்த்தாவில் வைத்து கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐந்து குற்றவாளிகள் அண்மையில் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்த்தக்கது.