செல்வச்சந்நிதி ஆலயத்தில் முதன்முறையாக ஓரே நேரத்தில் இன்று (28) 111 ஜோடிகளுக்கு திருமணம்:

தொண்டைமானாறு, செல்வச்சந்நிதி ஆலயத்தில் முதன்முறையாக ஓரே நேரத்தில் இன்று (28) 111 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகத்திற்கும் உட்பட்ட திருமணம் செய்யாத மற்றும் பதிவுத் திருமணம் செய்து தாலி கட்டாதவர்கள் உள்ளிட்ட 111 ஜோடிகளுக்கு சிங்கப்பூரைச் சேர்ந்தவரும் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட துரை தம்பதியினரால் திருமணம் செய்து வைக்கப்பட்டது. 

திருமணத்தின் போது அரைப்பவுண் தாலி, கூறை சேலை மற்றும் இதர செலவுகளையும் குறித்த சிங்கப்பூர் தம்பதிகள் வழங்கி குருமார்களின் ஆசியுடன் விசேட பூஜை ஆராதனைகள் இடம்பெற்று அனைத்து தம்பதியினரும் சுபமுகூர்த்த வேளையில் தாலி கட்டிக்கொண்டனர். 

திருமணத்திற்காக 111 தம்பதிகளையும் தெரிவு செய்வதற்கான ஏற்பாடுகளை யாழ்ப்பாண பிரதேச செயலர் ச.சுதர்சன், யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரன் ஆகியோர் மேற்கொண்டார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *