புட்டினுக்கும், ட்ரம்புக்கும் இடையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை இணக்கப்பாடு இன்றி முடிவு:

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் இடையில் சுமார் 3 மணி நேரம் இடம்பெற்ற அமைதி பேச்சுவார்த்தை எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்துள்ளது. 

சிறப்பு விமானத்தில் அலஸ்கா சென்ற ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் செங்கம்பள வரவேற்பளித்தார்.

ரஷ்ய ஜனாதிபதி புட்டினை, டிரம்ப் கைகுலுக்கி வரவேற்றார். அதன்பின், இரு நாட்டு தலைவர்களும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டதோடு, பேச்சுவார்த்தை நடைபெற இருந்த இடத்திற்கு இருவரும் ஒரே காரில் பயணித்தனர்.

இருவரும் தனியே சந்திப்பார்கள் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், இறுதிக்கட்டத்தில் இரண்டு தரப்பிலும் தலா 3 அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். 

குறித்த கூட்டம் சுமார் 3 மணிநேரம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் புட்டின் ஆகியோர் கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்தனர். 

அவர்கள் நின்று கருத்துதத் தெரிவித்த இடத்தின் பின்னணியில் சமாதானத்தை தொடர்தல் என்று எழுதப்பட்டு இருந்தது. 

முதலில் புட்டினை பேசுமாறு டிரம்ப் சைகை காட்டினார். அதன் படி, தனது பேச்சை ஆரம்பித்த புட்டின், டிரம்ப் உடனான சந்திப்பு தாமதமாக நடந்த ஒன்று என்று குறிப்பிட்டார். போர் மூண்டதற்கான முதன்மை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று புட்டின் தெரிவித்தார். அதாவது நேட்டோவில் உக்ரைன் இணைவது தொடர்பான பிரச்னைக்கு தீர்வு தேவை என்று புட்டின் வலியுறுத்தினார்.

எங்களுக்கு இடையே நடந்த போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.

நானும், டிரம்பும் வெளிப்படையாக பேசினோம். டிரம்ப் ஜனாதிபதியாக  இருந்திருந்தால் போர் தொடங்கியிருக்காது.

டிரம்பிற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எங்களுக்கு இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தை உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன்.

அடுத்த கட்ட னேரடி பேச்சுவார்த்தை ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் என்ன தெரிவித்து பத்திரிகையாளர் சந்திப்பை நிறைவு செய்துகொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *