வீசா காலம் முடிந்த பின்னரும் நாட்டில் தங்கியிருப்போர் மற்றும் கடவுச்சீட்டு ஆவண மோசடியில் ஈடுபட்டோரென இதுவரை 219 வெளிநாட்டுப் பிரஜைகள், கைது செய்யப்பட்டுள்ள தாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வீசாக் காலம் முடிவடைந்த பின்னரும் நாட்டில் தங்கியிருப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இவ்வாறானவர்கள் குறித்து வீசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதற்கான பணிப்புரைகள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.
பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடை க்கான வினாக்கள் வேளையில், சுசந்த குமார நவரத்ன எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களாக பொலிஸ் துறை, குடிவரவு,குடியகல்வு திணைக்களம், அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை, அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான செயலகம், தேசிய பொலிஸ் பயிற்சி நிலையம் ஆகியன காணப்படுகின்றன. தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், ஸ்ரீலங்கா பொலிஸ் 28 வீசாரணைகளையும்குடிவரவு, குடியகல்வு திணைக்களம்149 வீசாரணைகளையும்முன்னெடுத்துள்ளன.பொலிஸ் துறையானது துப்பாக்கிகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மனித படுகொலைகள், ஆயுதங்களைப் பயன்படுத்தி தடை செய்யப்பட்ட விலங்குகளை வேட்டையாடுதல் ஆகியவை தொடர்பாக வீசாரணைகளை மேற்கொள்கின்றது