யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்தில் மேலும் பல இடங்களிலும் மனித எச்சங்கள் இருப்பது ஸ்கான் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்த ஸ்கான் இயந்திரத்தை பெற்று ஆய்வுப் பணிகள் நடத்தப்பட்டதன்போதே, பல இடங்களிலும் மனித எச்சங்கள் காணப்படுவதை ஸ்கான் இயந்திரம் அடையாளப்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வீ.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இரண்டு புதைகுழிகள் அடையாளப்படுத்தப்பட்டு அந்த இடங்களில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இதுவரை 130 க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
இப்போது ஸ்கான் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ள இடங்களில் இன்னும் எத்தனை எலும்புக்கூடுகள் மீட்கப்பட போகின்றனவோ தெரியவில்லை.