பிரபல குணச்சித்திர நடிகரும், காமெடி நடிகருமான மதன் பாபு (71) உடல்நலக்குறைவால் காலமானார்.
சென்னையில் 1953ஆம் ஆண்டு பிறந்த மதன் பாபுவின், இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி ஆகும். இசையமைப்பாளராக திரை வாழ்க்கையை தொடங்கிய மதன் பாபு தமிழில் 1984ஆம் ஆண்டு வெளிவந்த ‘நீங்கள் கேட்டவை’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் தேவர் மகன், பூவே உனக்காக, நீ வருவாய் என, பிரண்ட்ஸ், வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.