யேமனில் உள்ள மூன்று துறைமுகங்கள் மற்றும் ஒரு மின் உற்பத்தி நிலையத்தின் ஹவுதி இலக்குகளை இஸ்ரேல் தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு யேமன் மீதான முதல் இஸ்ரேலிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் மீது ஹவுதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதால், ஹொடைடா, ராஸ் இசா மற்றும் சாலிஃப் துறைமுகங்கள் மற்றும் ராஸ் குவாண்டிப் மின் உற்பத்தி நிலையம் மீதான தாக்குதல்கள் நடந்ததாக இராணுவம் விளக்கமளித்துள்ளது.
அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதல்களை கண்டித்து யேமன் இஸ்ரேல் மீதான தாக்குதல்களை நடாத்திவருகிறது.
தற்போது ஹவுதிகளும் ஈராக்கில் செயல்படும் ஈரான் ஆதரவு ஆயுதக்குழுக்களும் மட்டுமே இஸ்ரேலின் முழுவீச்சிலான தாக்குதலில் இருந்து தப்பி வருகின்றன.