அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புடனான கடும் கருத்து மோதலை அடுத்து புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார் எலோன் மஸ்க்.
தமது சமூக ஊடகத்திலேயே, அமெரிக்கா கட்சி என்ற புதிய அரசியல் கட்சித் தொடங்கப்பட்டுள்ளதை எலோன் மஸ்க் அறிவித்துள்ளார்.
ஜூலை 4 அன்று மஸ்க் தனது ஆதரவாளர்களிடம் புதிய கட்சியை நிறுவலாமா என்று கேட்டு ஒரு ஒன்லைன் கருத்துக்கணிப்பை வெளியிட்டிருந்தார்.
அதில் 65.4 சதவீதம் பேர்கள் ஆதரவளித்து வாக்களித்திருந்தனர். இதனையடுத்தே, புதிய கட்சி தொடர்பில் எலோன் மஸ்க் அறிவித்துள்ளார். நமது நாட்டை வீண்செலவு மற்றும் ஊழலால் திவாலாக்கும் விடயத்தில், நாம் ஒரு கட்சி முறையில் வாழ்கிறோம், ஜனநாயக முறை அல்ல அது.
இன்று, உங்கள் சுதந்திரத்தை உங்களுக்குத் திரும்பக் கொடுக்க அமெரிக்கக் கட்சி உருவாக்கப்பட்டது எனவும் மஸ்க் பதிவு செய்துள்ளார்.