கடலில் ஏற்படும் விபத்துக்கள், உயிரிழப்புக்கள் மற்றும் அத்துமீறல்கள் தொடர்பில் கலந்துரையாடல்:

அண்மைய நாட்களில் ஏற்பட்ட மீன்பிடி படகு விபத்துகள் காரணமாக மீனவர்களின் உயிரிழப்புகள் தொடர்பாகவும், அது குறித்து நியமிக்கப்பட்ட குழுக்கள் மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான விபத்துகளைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் மீனவ சமூகம் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நோக்குடன், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை (01) அமைச்சின் கேட்போர் கூடத்தில் விசேட ஊடக சந்திப்பு நடைபெற்றது.

இந்த ஊடக சந்திப்பில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. எஸ்.ஜே. கஹவத்த, இலங்கை கடற்படையின் ஊடகப் பணிப்பாளர் கமாண்டர் புத்திக சம்பத், இலங்கை கடலோரக் காவல் திணைக்களத்தின் கட்டளை அதிகாரி திமுத்து சமீர திஸேரா, இலங்கை விமானப்படையின் ஊடகப் பணிப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் எரந்த கீகனகே மற்றும் வர்த்தக கப்பல் பணிப்பாளர் நாயகம் திரு. அசங்க தேசப்பிரிய ஆகியோருடன், கடற்றொழில் அமைச்சின் மேலதிக செயலாளர் (கடற்றொழில் வள முகாமைத்துவம்) திரு. தம்மிக ரணதுங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *