அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைக்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (29) காலை ஆஜராகியுள்ளார்.
ரோயல் பார்க் கொலை சம்பவம் தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பில் அண்மையில் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில் மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.