இலங்கை பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரமடைந்ததாக கூறப்பட்டாலும், அதன் பின்னரான சில வருடங்களிலேயே தமிழர்களுக்கு எதிரான கடும் போக்கையும், அடக்குமுறைகளையும், படுகொலைகளையும் எந்த தயக்கமும் இன்றி அரங்கேற்றி வந்த சிங்கள பெளத்த பேரினவாத அரசாங்கங்களும் 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி மிகப்பெரும் இனக்கலவரத்தை கட்டவிழ்த்ததன் காரணமாக சிங்கள காடையர்களாலும், அரச படைகளாலும் ஈவிரக்கமின்றி 3000 ற்கும் அதிகமான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
வெலிக்கடை சிறைக்குள் மட்டும் குட்டிமணி, தங்கத்துரை உட்பட்ட 53 பேர் மிக கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
பல கோடி பெறுமதியான தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டும், அழிக்கப்பட்டும், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தென்னிலங்கையில் இருந்து விரட்டப்பட்டட்டும் அக் கொடூரம் அரங்கேறியிருந்தது.
அக் கொடிய நினைவுகள் சுமந்த கரிய நாட்களின் சாட்சிகளாக பலர் இன்றும் இருக்கின்றனர்.








