முன்னாள் கடற்படை புலனாய்வுப் பணிப்பாளர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் மொஹோட்டி செப்டம்பர் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று அதிகாலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (சிஐடி) கைது செய்யப்பட்ட பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அளவ்வ பகுதியில் இளைஞன் ஒருவர் 2010ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.