இன்று (22) காலை மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகளால் வெலிகம பிரதேச சபையின் தலைவர் ‘மிதிகம லசா’ என்ற லசந்த விக்ரமசேகர சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பிரதேச சபையில் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருந்த போதே துப்பாக்கிதாரிகள், பிரதேச சபை தலைவரிடம் கடிதம் ஒன்றில் கையொப்பம் பெறுவது போன்று வந்து மேற்படி துப்பாக்கிச் சூடு நடாத்தியுள்ளனர்.
படுகாயமடைந்த அவரை பிரதேச சபை அதிகாரிகள் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதித்த போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்லமை குறிப்பிடத்தக்கது.