மன்னார்-யாழ் பிரதான வீதியில் விபத்து !

மன்னார்-யாழ்பிரதானவீதி,கள்ளியடி பகுதியில் சனிக்கிழமை (3) அன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில்  பலர் படுகாயமடைந்துள்ளனர்.

மன்னாரில் உள்ளஆடைதொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் பணியாளர்களை ஏற்றிவந்ததனியார் பேருந்து கள்ளியடி பகுதியில் பணியாளர்களை ஏற்றுவதற்காக வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதன் போது குறித்த பேருந்துக்கு நேர் எதிரே அதிவேகமாக வந்த ஹென்டனர் ரகவாகனம் கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த பேருந்துடன் மோதி குறித்த வீதியில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த ஒருவர்மீதும் மோதி பாரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் போது மோட்டார் சைக்கிலில் நின்ற நபரும் காயமடைந்ததுடன்,அவரது மோட்டார் சைக்கிலும் பலத்த சேதமடைந்துள்ளது.  குறித்த விபத்தில்  ஹென்டனர் ரக வாகனத்தின் சாரதி,உதவியாளர் ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும் ஆடைதொழிற்சாலை பணியாளர்கள் 09 பேரும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து குறித்து இலுப்பைக்கடவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *