பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் நாயகம் பிரேமசிறி ரத்நாயக்க நீக்கப்பட்டு அந்த பதவிக்கு கசுன் வெல்லஹேவா நியமிக்கப்பட்டுள்ளார்.
தனது கடமைகளை முறையாகச் செய்யாத குற்றச்சாட்டின் பேரில் பிரேமசிறி ரத்நாயக்கவை பதவியில் இருந்து நீக்க அமைச்சரவை முடிவு செய்திருந்தது.
பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் நாயகமாக பணியாற்றிய பிரேமசிறி ரத்நாயக்க தனது கடமைகளை முறையாகச் செய்யாததற்காக புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது.
குறித்த குற்றப்பத்திரிகை கடந்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், இதன்போது அவரை பதவியில் இருந்து நீக்க அமைச்சரவை முடிவு செய்ததாக புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.