பிலிப்பைன்ஸில் 6.9 ரிச்டர் நிலநடுக்கம்: 27 பேர் பலி !

பிலிப்பைன்ஸின் மத்திய பகுதியில் அமைந்துள்ள விசாஸ் (Visayas) பிராந்தியத்தில் நேற்றிரவ (30) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 150 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் இன்று (01) அதிகாலை தெரிவித்துள்ளனர்.

இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என மீட்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதனால் செபு மாகாணத்தின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கட்டிடங்கள், வீதிகள், பாலங்கள் மற்றும் வரலாற்று சிற்றாலயங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

போகோ நகரில் உள்ள விளையாட்டு அரங்கம் இடிந்து, அங்கு கூடியிருந்தவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

செபு நகரில் சுமார் 10.6 இலட்சம் மக்கள் வசிக்கின்றனர். பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் (Phivolcs) சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று உறுதியளித்துள்ளது. இருப்பினும் சிறிய கடல் அலை அச்சுறுத்தல் காரணமாக கடற்கரை பகுதிகளை விட்டு விலக இருந்ததாக அறிவுறுத்தியது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *