பருத்தித்துறை, மூர்க்கம் கடற்கரையில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் நேற்றுப் பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.
தும்பளை கிழக்கைச் சேர்ந்த 36 வயதுடைய பெண் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் ஒரு பிள்ளையின் தாயாவார். கணவர் வெளிநாட்டில் உள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கடற்கரையில் சடலம் ஒன்று ஒதுங்கியுள்ளது என்று கிடைத்த தகவலுக்கமைய பருத்தித்துறைப் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் பின்னர் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.