யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டை காட்டு பகுதியில் நூற்றுக்கணக்கான பனை மரங்களுக்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
நேற்று (07) மாலை ஐந்து முப்பது மணி அளவில் கட்டைக்காடு ராணுவ முகாமிற்கு முன்னால் காணப்பட்ட நூற்றுக்கணக்கான பனைகள் திடீரென தீப்பற்றி எரிந்தது.
நிலைமையை உணர்ந்து கொண்ட இராணுவத்தினர் தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வாகனத்தை வரவழைத்ததுடன் மருதங்கேணி இராணுவ முகாமில் இருந்தும் தீயை அணைப்பதற்காக 200 இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர்.
விஷமிகளால் வைக்கப்பட்ட தீ பரவலாக பற்றி எரிகின்ற போதும் தீயணைப்பதற்கு இராணுவத்தினர் கடுமையாக போராடி வருகிறார்கள், பற்றி எரியும் தீ ஏனைய பனை மரங்களுக்கும் வேகமாக பரவி வருகின்றது.
தற்பொழுது பனம் பழ சீசன் என்பதால் இந்த பனைகளில் இருந்து பயன் பெறும் மக்கள் குறித்த சம்பவத்திற்கு தங்களுடைய கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்கள்.