நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவுக்கு திடீர் பதவி உயர்வு – செம்மணி வழக்கை திசைதிருப்பும் நோக்கமா!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 18 பேரை நியமித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, குறித்த நியமனக் கடிதங்களை இன்று (3) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு  வழங்கினார்.

விசேட தர நீதித்துறை அதிகாரிகள்  17 பேரும் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றும் சிரேஷ்ட அரசதரப்பு சட்டத்தரணி ஒருவரும் இவ்வாறு மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 111 ஆவது அரசியலமைப்பின் (2) ஆவது உப பிரிவின்படி ஜனாதிபதியினால்  இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.

இவ்வாறு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளின் பட்டியல்                        முந்தைய பதவிகள்

  1. திரு. எஸ்.எஸ்.கே. விதான                                                           மாவட்ட நீதிபதி
  2. திரு. ஏ.எம்.ஐ.எஸ். அத்தநாயக்க                                               மாவட்ட நீதிபதி
  3. திரு. ஏ.எம்.எம். ரியால்                                                                  மாவட்ட நீதிபதி
  4. திரு. டீ.பீ. முதுங்கொடுவ,                                                           மாவட்ட நீதிபதி
  5. திரு. எஸ்.பி.எச்.எம்.எஸ். ஹேரத்                                               மேலதிக மாவட்ட நீதிபதி
  6. திரு. ஜே. கஜனிதீபாலன்                                                             மாவட்ட நீதிபதி
  7. திரு. டி.எம்.டி.சி. பண்டார                                                            நீதிச் சேவை ஆணைக்குழுவின்                                                                                                              சிரேஷ்ட மேலதிக செயலாளர்
  1. திரு. எச்.எம்.பி.ஆர். விஜேரத்ன                                                 மேலதிக மாவட்ட   நீதிபதி
  2. திரு. டி.எம்.ஏ. செனவிரத்ன                                                        மேலதிக மாவட்ட நீதிபதி
  3. திரு. ஏ.ஏ. ஆனந்தராஜா                                                               நீதவான்
  4. திரு. ஜி.என். பெரேரா                                                                    மாவட்ட நீதிபதி
  5. திரு. ஏ. ஜுடேசன்                                                                           மாவட்ட நீதிபதி
  6. திருமதி.டபிள்யூ.கே.டி.எஸ். வீரதுங்க                                       மாவட்ட நீதிபதி
  7. திரு.ஆர்.பி.எம்.டி.ஆர். வெலிகொடபிடிய                                மாவட்ட நீதிபதி
  8. செல்வி கே.டி.என்.வி. லங்காபுர,                                               நீதவான்
  9. திரு. டி.எம்.ஆர்.டி. திசாநாயக்க                                                மாவட்ட நீதிபதி
  10. திரு. எம்.ஐ.எம். ரிஸ்வி                                                                 மாவட்ட நீதிபதி
  11. திருமதி. ஏ. ஜெயலக்ஷி டி சில்வா                                             சிரேஷ்ட அரசதரப்பு சட்டத்தரணி

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.

அரியாலை – செம்மணிப் புதைகுழி வழக்கை, மிகச் சிறப்பான முறையில் கையாண்டு வந்த யாழ்ப்பாணம் மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க விடையமாக இருந்தாலும், செம்மணி வழக்கை திசை திருப்ப அங்கிருந்து அவரை அப்புறப்படுத்தும் நோக்கம் கொண்டதாக இப் பதவி உயர்வு அமைந்துள்ளதோ என்ற சந்தேகமும் வந்துள்ளது.

மேல்நீதிமன்ற நீதிபதிகளாக சில நீதிபதிகள் பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவராகவே, நீதிபதி ஆனந்தராஜாவுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பதவி உயர்வுக்கான அனுபவத்தையும், தகுதியையும் நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா நீண்ட காலத்துக்கு முன்னரே பெற்றிருந்த போதிலும், தற்போது திடீரென இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால், நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்குகளை இனிவரும் நாள்களில் கையாள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கில், கிட்டத்தட்ட 50 வீதத்துக்கும் மேற்பட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. பணிகள் இவ்வாறு வேகமாக நிறைவடைவதற்கு நீதிபதி ஆனந்தராஜா காட் டிய அக்கறையும், அவருடைய அர்ப்பணிப்பான செயற்பாடுகளுமே காரணம் என்று துறைசார் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். இவ்வாறான நிலையிலேயே, அவருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டு, செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கை அவர் கையாள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

அகழ்வுப் பணிகளை சம்பிரதாயபூர்வமாக மேற்பார்வை செய்யாமல், சான்றுப் பொருள்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளையும் நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னெடுத்திருந்தார். அகழ்வுப் பணிகளின் கால அளவை நீடிப்பது தொடர்பில் காத்திரமான உத்தரவுகளை வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *