வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள் தமிழ்நாடு – நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஷா.நவாஸை சந்தித்து கலந்துரையாடினர்.
இன்று (22) முற்பகல் யாழ். தெல்லிப்பளையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இலங்கை, இந்திய மீனவர்களுக்கிடையில் தொடர்ந்துவரும் முறுகல் நிலையை தணிக்கும் முகமாக அது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலாக மேற்படி சந்திப்பு அமைந்த போதிலும் சட்டமன்ற உறுப்பினர் ஷா.நவாஸ் தனிப்பட்ட விஜயமாகவே யாழ்ப்பாணம் வருக்கை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.