யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டார்.
யாழ்ப்பாணத்திற்கு நேற்று (18) விஜயம் செய்த சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன யாழ். பொதுசன நூலகம் மற்றும் கோட்டை பகுதிகளை பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன் போது யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபவானந்தராசாவும் உடனிருந்தார்.