திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொலை செய்து, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசிய ஒரு நபரும் அவருடைய கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், கடந்த புதன்கிழமை, அதாவது, ஆகத்து மாதம் 13ஆம் திகதி, இளம்பெண்ணொருவரின் தலையும் உடல் பாகங்களும் ஒரு கிணறு மற்றும் நதி ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டன.
விசாரணையில், அது Mahewa என்னுமிடத்தில் காணாமல் போன ரச்னா யாதவ் (35) என்னும் பெண்ணுடைய உடல் என தெரியவந்தது.
தொடர் விசாரணையில், ரச்னா, கிராமத் தலைவரான சஞ்சய் பட்டேல் (25) என்பவருடன் இரண்டு ஆண்டுகளாக தொடர்பிலிருந்தது தெரியவந்தது.
ரச்னா தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு சஞ்சயை வற்புறுத்திவந்ததுடன் அவரை அவ்வப்போது மிரட்டி பணமும் வாங்கிவந்துள்ளார்.
எப்படியாவது ரச்னாவை ஒழித்துக்கட்ட முடிவு செய்த சஞ்சய், தன் உறவினரான சந்தீப் பட்டேல் மற்றும் தீபக் அஹிர்வார் ஆகியோருடைய உதவியுடன் ரச்னாவைக் கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார்.
மேலும் ரச்னாவின் உடலை துண்டு துண்டாக வெட்டி, அவரது கைகளையும் உடலையும் ஒரு கிணற்றிலும், தலையையும் கால்களையும் ஒரு நதியிலும் வீசியிருக்கிறார்கள்.
சஞ்சயும் சந்தீப்பும் சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாகிவிட்ட தீபக்கைக் குறித்து துப்புக் கொடுப்பவர்களுக்கு 25,000 ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் என பொலிசார் அறிவித்துள்ளார்கள்.