தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த பேரவலங்களை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் வகையில் செம்மணி படுகொலை நினைவு முற்றம் உருவாக்கப்படுவதோடு தமிழின வரலாற்றுடன் தொடர்புடைய விடயங்கள் புனரமைக்கப்படும் என தமிழ்தேசிய பேரவை தெரிவித்துள்ளது
தமிழ்தேசிய பேரவை உள்ளுராட்சி சபை தேர்தல் யாழ்ப்பாண மாநரகசபைக்கான முன்மொழிவுகள் செயல்திட்ட ஆவணத்தை இன்று வெளியிட்டுள்ளது
டிஜிட்டல் முறையிலான செயற்திட்டங்களுடன் தூய கருக்களுடன் தூய மாநகரத்தை கட்டமைப்பதற்காக,யாழ்ப்பாண மாநகரசபை வட்டாரங்களில் இருந்து தமிழ்தேசிய விடுதலைக்காக தமிழ்தேசியஉணர்வு மிக்கவர்களால்,துடிப்புடன் செயற்படும் நேர்மையான ஊழல்அற்ற புதிய தலைவர்களை உள்ளடக்கிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்திற்கே உங்கள் வாக்குகளை செலுத்துங்கள்.
மாநகரசபையின் வருமானங்கள் மற்றும் அரச அரசசாரத நிதிகள் உரிய முறையயில் திட்டமிடப்பட்டு,நிலையான அபிவிருத்தியை நோக்கி இலஞ்சம் ஊழல் அற்ற பொறுப்புக்கூறல் வெளிப்படைத்தன்மை கொண்ட நிர்வாக கட்டமைப்பை உருவாக்குவதற்கு சைக்கிள் சின்னத்திற்கு மக்களின் ஏகோபித்த ஆணை அமையட்டும்.
எமது ஆட்சிக்காலத்தில் மாநகரசபைக்காக மக்கள் என்ற எண்ணம் நீக்கப்பட்டு மக்களிற்காகவே மாநகரசபை என்ற எண்ணம் உருவாக்கப்பட்டு மக்களிற்கான சேவைகளிற்கே முதன்மையளிக்கப்படும்.
தேங்கியிருக்கும் மக்கள் சார் தேவைகள் அனைத்தும்,நாம் ஆட்சி அமைத்து மூன்று மாத காலத்திற்குள் மக்கள் நடமாடும் சேவைகள் ஊடாக சீர்செய்யப்படும்.
கழிவகற்றல் மின்விளக்கு பொருத்தல் குடிநீர் தொடர்பான சேவைகள் முறைப்பாட்டு பெறுதல்கள் டிஜிட்டல் முறையில் இலகுபடுத்தப்படுவதுடன்,சோலை வரி உட்பட ஏனைய சேவைகளும் டிஜிட்டல் முறையில் இலகுபடுத்தப்படும்.
தற்காலத்தில் ஏற்பட்டுள்ள சமூகசீர்கேடுகள் மற்றும் அச்சுறுத்தல்களில் இருந்து யாழ்மாநகரசபையின் குடியிருப்பாளர்களை பாதுகாப்பதற்கு ஒவ்வொரு வட்டாரத்திலும் 24 மணிநேரமும் கண்காணிக்ககூடிய வகையில் தரமான கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதுடன் சட்டவிரோத செயற்பாடுகளிற்கு ஆதரவாக செயற்படுவோருக்குபாரபட்சம் இன்றிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அனைத்து பிரதேசங்களிலும் நீர் விநியோக செயற்பாடு முன்னெடுக்கப்படுவதுடன் மழைநீர் சேகரிப்பு திட்டமும் விரிவாக முன்னெடுக்கப்படும்.
உள்ளுர் வீதிகள் பாரபட்சமின்றி செப்பனிடப்பட்டு திருத்தப்படுவதோடு வடிகால் அமைப்பும் சீர் செய்யப்பட்டு தெருவிளக்குகளும் பொருத்தப்படும்.
ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மதகுகளும் பாலங்களும் சீராக்கப்படுவதுடன் வெள்ள நீர் வழிந்தோடுவதற்கு அவசியமான பாலங்கள் மதகுகளை அமைப்பது தொடர்பான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
நகரத்தின் பிரதான வடிகால்களில் இருந்து கடலிற்கு செல்லும் வடிகால்கள் வெள்ள அனர்த்தங்கள் ஏற்படாத வகையில் நிபுணத்துவ ஆய்வுடன் சீரமைக்கப்படும்.
சிறப்பாக செயற்படும் சனசமூக நிலையங்கள் விளையாட்டு கழகங்கள் எதிர்கொள்ளும் நிதிநெருக்கடியை நிவர்த்தி செய்வதற்காக சபையினால் வழங்கப்படும் ஒப்பந்த வேலைகளில் இவர்களிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
யாழ்மாநகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட ஆலயங்கள் பள்ளிவாசல் மதவழிபாட்டு தலங்கள் போன்றவற்றிற்கு அனைத்து விதமான ஒத்துழைப்புகளையும் வழங்குவதுடன் அவற்றிற்கு தேவையான உதவிகள் சிறப்பான முறையில் வழங்கப்படும்.
யாழ்மாநகரசபை எல்லைக்குள் காணப்படும் குளங்கள் யாவும் உரிய முறையில் புனரமைத்து பாதுகாக்கப்படுவதுடன் ,குளங்களை சுற்றி நடைபாதைகள் மற்றும் பொதுமக்கள் ஓய்வெடுப்பதற்கான வசதிகள் உருவாக்கப்படும்.
தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த பேரவலங்களை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் வகையில் செம்மணி படுகொலை நினைவு முற்றம் உருவாக்கப்படுவதோடு தமிழின வரலாற்றுடன் தொடர்புடைய விடயங்கள் புனரமைக்கப்படும்.
யாழ்ப்பாண மாநகரசபையின் உண்மையான மாற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட தயாராகவுள்ள சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.
நீங்கள் வாக்களிக்கும் இறுதி நேரத்திலும் கூட சிந்தனை கலையான திடமான மாற்றத்தை உருவாக்க தமிழ்தேசிய பேரவையாக பயணிக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்திற்கே வாக்களிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.