பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில இன்று (29) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார்.
ஆளுங்கட்சியின் 159 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாதத்திற்கு 03 கோடி ரூபாய்க்கு மேல் பெற்று அதை கட்சி நிதியில் வரவு வைத்து அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது பொது நிதியை தவறாக பயன்படுத்தும் செயலாகும் எனவும், இந்த விடயம் குறித்து விசாரணை நடத்த கோரியும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் அவர் முறைப்பாடு அளித்துள்ளார்.
“தொலைபேசி கட்டணம், எரிபொருள் மற்றும் அலுவலக பராமரிப்புக்காகப் பயன்படுத்தப்படும் இந்தப் பணத்தை கட்சி நிதிக்கு அனுப்பி அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவது பொது நிதியை தவறாகப் பயன்படுத்துவதாகும்.
ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 160 பேரும் பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதில் மாதத்திற்கு 3 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளது.
எனவே, இந்த 160 பேரிடமும் சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரி இன்று நாங்கள் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வந்துள்ளோம்.” என்றார்.