செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று (27) புதிதாக 3 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
நேற்று புதிதாக 16 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்றும் மேலும் 3 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, நேற்று அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகளில் 8 எலும்புக்கூடுகள் இன்று முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
கட்டம் கட்டமாக இதுவரையில் 43 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, மொத்தமாக 169 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் இதுவரை 158 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.