செம்மணி மனிதப் புதை குழியில் இதுவரை 31 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன் 35 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த பகுதிக்கு அண்மித்த பகுதியிலும் எலும்புக்கூடுகள் காணப்படலாம் என்ற சந்தேகத்தில் அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்காக அந்தப் பகுதியில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த துப்புரவு பணிகளானது யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தொல்லியல் பீடத்தினரால் முன்னெடுக்கப்படுகின்றது.
குறித்த மனித புதை குழியில் இதுவரை சிறுவர்கள், குழந்தைகள் மற்றும் பெரியோர் என பலரது எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் புத்தகப்பை, பொம்மை, சப்பாத்து போன்ற பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.