ரஷ்ய போருக்கு ஆதரவளிப்பதாகக் குறிப்பிட்டு சீன அரசாங்கத்துடன் தொடர்புடைய 15 எண்ணெய் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.
இத்தடையைக் கண்டித்துள்ள சீனா, மோதலில் ஈடுபட்டுள்ள எந்தவொரு தரப்பினருக்கும் ஒருபோதும் ஆயுதங்களை வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை சீனாவின் இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலைகளுக்கும் ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட எண்ணெய் வர்த்தகர் ஒருவருக்கும் ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 27 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் தடை செய்யப்பட்டுள்ள நிறுவனங்களின் பட்டியலில் குறித்த 15 சீன எண்ணெய் நிறுவனங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சீன வௌியுறவு அமைச்சு விடுத்திருக்கும் அறிக்கையில், ஐரோப்பா, அமெரிக்கா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்கின்றன. ஆனால் சீன மற்றும் ரஷ்ய நிறுவனங்களுக்கு இடையிலான சாதாரண பரிமாற்றங்கள், ஒத்துழைப்புக்கே ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் விரல் நீட்டுகின்றன’ என்றும் குறிப்பிட்டுள்ளது.