சாவகச்சேரியில், போதை பொருட்களுடன் 10 பேர் கைது!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தமை , போதை மாத்திரைகளை வைத்திருந்தமை , மாவா பாக்கினை வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டுள்ள 10 பேரையும் சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *