சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 பேர் கடற்படையினரால் கைது:

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள், டைவிங் உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 22 நபர்களுடன் 5 டிங்கி படகுகளையும் கடற்படை கைது செய்துள்ளது. 

கடற்படை, பொலிஸார் மற்றும் மீன்வளம் மற்றும் நீர்வளத் துறை ஆகியவை ஜூலை 23 முதல் 31 வரை நாட்டின் கடல் எல்லைகளை உள்ளடக்கியதாக இந்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டன. 

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த 210 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டார். 

திருகோணமலையின் கோட்பே, கும்புறுப்பிட்டி, கிண்ணியா, மூதூர் மற்றும் மன்னாரின் கக்கரதீவு ஆகிய கடற்கரை மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கியதாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *