இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி மற்றும் அவரது மனைவி சுதா நடத்திவரும் Infosys அறக்கட்டளை மூலம் தாய்-சேய் சுகாதார நலனுக்காக ரூ.48 கோடி நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பாசறை அமைப்பான Infosys Foundation, கர்நாடக மாநிலத்தின் கிராமப்புறங்களில் தாய் மற்றும் குழந்தைக்கான மருத்துவ சேவைகளின் மேம்பாட்டிற்காக ரூ.48 கோடியை நன்கொடை வழங்கியுள்ளது.
இந்த நன்கொடையை ஐ.நா அங்கீகரித்த பிரசாந்தி பாலமந்திரா டிரஸ்ட் உடன் இணைய்ந்து வழங்குகிறது.
இந்த முயற்சியின் கீழ் ஸ்ரீ சத்ய சாயி சரளா நினைவாக மருத்துவமனை மற்றும் ஸ்ரீ மதுசூதன சாயி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (SMSIMSR) இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றன.
இந்த நன்கொடை தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான மேம்பட்ட மருத்துவ உபகரணங்களைப் பெற பயன்படுத்தப்படும். இதில்:
நவீன மகப்பேறு மற்றும் மகளிர் சிகிச்சை சாதனங்கள் NICU, PICU, ICU
துல்லியமான ரேடியாலஜி மற்றும் அறுவை சிகிச்சை வசதிகள்
ஆண்டு தோறும் குறைந்தது 8,000 பேர் பயனடைவார்கள்
மேலும், இது ஒரு போதனை மருத்துவமனையாக செயல்படுவதால், மாணவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவப் பயிற்சியாளர்களுக்கு தொழில்நுட்ப மேம்பாட்டிற்கும் பயன்படும்.