கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்ட 30 ஏக்கர் காணி:

கடந்த 2009 ஆண்டு முதல் கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமிருந்த முப்பது ஏக்கர் வரையான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

பூனகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள பொன்னாவெளி கிராம அலுவலர் பிரிவிலுள்ள 07 ஏக்கர் காணி கடந்த (07-09-2025) அன்று விடுவிக்கப்பட்டு பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது குறித்த காணி தற்காலிகமாக மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திடம் பொறுப்பில் கையளிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று நல்லூர் கிராம அலுவலர் பிரிவிலுள்ள முட்கொம்பன் பகுதியில் இரானுவத்தினர் வசமிருந்த 20 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள இயக்கச்சி பகுதியில் இரானுவத்தினர் வசமிருந்த தணியாருக்கு சொந்தமான எட்டுப் பேரின் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் எதரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *