இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் இலங்கை சுமார் 250,000 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாகவும், இதன் மூலம் வரியாக 63,000 கோடி ரூபாயை ஈட்டியுள்ளதாகவும் சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் தனிநபர் மற்றும் வர்த்தக வாகனங்கள் உட்பட ஒட்டுமொத்த இறக்குமதிக்காக சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 36,431 கோடி இலங்கை ரூபா) செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.